தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை விதித்த இராணுவ வீரர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டுமென கோரிக்கை…

இலங்கை இராணுவத்தினர் இருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளமையை மாற்றி,   குறித்த இராணுவத்தினருக்கு  ஜனாதிபதி  பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையினை தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன விடுத்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை  கூறியுள்ளார்.

மேலும்  யுத்தத்திற்கு சென்று உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக போராடியவர்களிற்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டதனால்  காரணத்தினால் அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த இரு இராணுவ வீரர்களுக்கும்,   யாழில்  விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற  நபர்  ஒருவரை   கொலை செய்த குற்றத்திற்காக  நீதிபதி இளஞ்செழியன் நேற்றையதினம்   மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த நிலையில்  குறித்த இரு இராணுவத்தினருக்குமே பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென  தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன  கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...