தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஏற்படட சர்ச்சை! சமாதான குலைவு தொடர்பிலான வழக்கு மார்ச் 22 ம் திகதி..

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனவரி  14 ஆந் திகதி அன்று பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற பிரதேச தமிழ் மக்களுக்கும் கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.இதனடிப்படையில் குறித்த இடத்தில் ஏற்படட பிரச்சினைகள் தொடர்பில் சமாதான குலைவு ஏற்ப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படட வழக்கு கடடளைக்காக மார்ச் 22 ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது 

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவடட நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்  வழக்கு  மார்ச் 22 ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் அறியவருகையில்

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட் ட நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது   வழக்கு கடடளை  மார்ச் 22 ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது என மன்றில் முன்னிலையான  சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்

குறித்த வழக்கானது இன்று கடடளை இடுவதாக இருந்தது இருப்பினும் இந்த 22 ம் திகதி இடுவதாக அறிவித்திருக்கிறது அத்துடன் இந்த விடயத்துடன் தொடர்புபடுத்தி ஆலய தரப்பினரால் பௌத்த மதகுருவை அச்சுறுத்தியது மற்றும் தொல்பொருள் திணைக்கள பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது அதற்கு ஆடசேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது ஆலய பெயர்ப்பலகை மாற்றியபோது நாம் சென்று போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தபோது  போலீசார் இதுதொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுதொடர்பிலும் மன்று ஆராய்ந்து இரண்டு வழக்குகளுக்கும் மார்ச் 22 ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனவரி  14 ஆந் திகதி அன்று பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற பிரதேச தமிழ் மக்களுக்கும் கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி  29 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும் இந்த வழக்கின் அவசர தன்மை கருதி உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் சார்பாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் ஜனவரி 24 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்வதாகவும் அன்றைய தினம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் அங்கு விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இதனடிப்படையில் ஜனவரி 24 ஆம் திகதி வழக் இந்த வழக்கு விசாரணைகளில் விகாரை வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழலில் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்ட விரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை வழக்குக்கு முதல்நாளே  திறக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்கு உள்ளிட்ட பெரும்பான்மையினத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை மாசி 12 ம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி  வழக்கில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை ஆயராக உத்தரவிடடார்

தொடர்ந்து மாசி 12 ல் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று மார்ச் 15 கடடளை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தபோது குறித்த வழக்கு இன்றைய தினம் கடடளைக்காக  திகதியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...