தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நூலிழையில் உயிர் தப்பிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஹெலிகாப்டர் விபத்திலிருந்து, நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

சிந்து மாகாணத்தில் உள்ள டான்டூ ஆடம் ((Tando Adam)) நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சர்தாரியை வரவேற்பதற்காக போடப்பட்டிருந்த சிகப்பு கம்பளங்கள், சூறாவளி கற்றில் சிக்கியதுபோல், மேலேழும்பி பறந்துள்ளது.

அதன்பின்னர் ஒருகட்டத்திற்கு மேல், காற்றின் வேகம் குறைந்ததால் அவை கீழே விழுந்த  பின்னர்  ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

இதேவேளை  ஹெலிகாப்டர் இறக்கைகளில், சிகப்பு கம்பளம் சிக்கியிருந்தால், யாரும் எதிர்பார்க்காத பெரும் விபத்து நேரிட்டிருக்கும்.

Comments
Loading...