தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர்…

எதிர்வரும்  மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக  செயற்பட்டுவருகின்றார்.

இந்நிலையில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தில் வெளியேறுவது முதல் நாட்டின் பல்வேறு நலன்களில் தெரசாமே சமரசம் செய்து கொள்ளவதாக  அவர்மீது  புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே  நாடாளுமன்றத்தில் தெரசா ஒப்புதலுக்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வைத்த போது ஒப்பந்தத்திற்கு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்துதனர்.

இந்நிலையில் நாளை கடைசி முயற்சியாக அவர்களை  சம்மதிக்க வைக்கும் முயற்சியில் பிரதமர் தெரசாமே ஈடுபட்டு வருகின்றார் .

இந்த முறையும் தெரசா முயற்சி தோல்வி அடைந்தால் தெரசா மேக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர போவதாக தொழிலாளர் கட்சி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...