தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நேற்றைய IPL மற்றும் புள்ளி விவரம்

கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கட்டா, 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நிடிஷ் ரனா 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய என்ரு ரசல் 12 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

பதிலளித்து துடுப்பாடிய டெல்லி அணி, 14.2 ஓவர்களில் 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

ஆட்டநாயகனாக நிட்டிஸ் ரனா தெரிவானார்.

இதேவேளை, புள்ளிவிவரத்தின் படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

அந்த அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி 3லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

3 போட்டிகளில் இரண்டு வென்றுள்ள கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

கொல்கட்டா, தாம் விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று, 2ல் தோல்வியுற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், ஓட்டசராசரி அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆகிய அணிகள்,  4 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், சராசரி ஓட்டப்பெறுமதியின் அடிப்படையில் 4ம் மற்றும் 5ம் இடங்களில் உள்ளன.

ராயல் செலஞ்சர்ஸ் பெங்களுர், டெல்லி டெயார்டெவில்ஸ், ஆகிய அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் இன்னும் எந்த போட்டியிலும் வெற்றிகொள்ளாத நிலையில், புள்ளி எதனையும் பெறவில்லை.

Comments
Loading...