தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பகல்-இரவு டெஸ்ட் பட்டியலில் இணைந்தது வெஸ்ட் இண்டீஸ்

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் போட்டிற்கான அந்தஸ்து குறைந்து வருகிறது. ஐந்து நாட்கள் என்பதால் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து ஆட்டத்தை ரசிப்பது குறைவதால், பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஐசிசி முயற்சி செய்தது.

முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் பகல் இரவு டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தின. இந்திய கிரிக்கெட் வாரியமும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சி செய்தது. இந்தியாவில் மாலை 6 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தால் சர்வதேச போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இன்னும் எட்டவில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை அணி கடந்த 2008-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியிருந்தது. அப்போது 1-1 எனத் தொடரை சமன் செய்திருந்தது. அதன்பின் தற்போது 10 வருடங்க்ள கழித்து இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் 3-வது டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆக நடத்தப்பட இருக்கிறது. இதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும்.

போட்டி அட்டவணை:-

பயிற்சி ஆட்டம்: மே 30-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை: பிரைன் லாரா கிரிக்கெட் கிரவுண்ட், டிரினிடாட்.

முதல டெஸ்ட்: ஜூன் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை: குயின்ஸ் பார்க் – டிரினிடாட்

2-வது டெஸ்ட்: ஜூன் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை: டேரன் சமி கிரிக்கெட் கிரவுண்ட்- செயின்ட் லூசியா

3-வது டெஸ்ட்: ஜூன் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை: கென்சிங்டன் ஓவல் – பார்படோஸ் (பகல்-இரவு டெஸ்ட்)

Comments
Loading...