தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பங்களாதேஸ் விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து!

பங்களாதேஸின் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள எயர் இந்தியா அலுவலகத்தின் 3வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை அடுத்து விமான நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டதுடன் மக்கள் விமான நிலையத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகம் முழுவதும் தீயில் எரிந்து விட்டது எனவும் பாதுகாப்பு பெட்டகம் , காகிதாதிகள் , மற்றும் பணம் எல்லாம் தீயில் கருகி போய்விட்டதென எயர் இந்தியா சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...