தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

படையினரைக் கைதுசெய்வது பொருத்தமான செயல் அல்ல – ஜனாதிபதி..

படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  நடைபெற்றுள்ளது.

பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த குறித்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது

இதன்போது முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கடும் கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்த அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...