தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்?? -எஸ்.சிறீதரன்

இறுதி யுத்தத்தில்  படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில்  நேற்றையதினம்  இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேசத்தின் விசாரணையை அரசாங்கத்திலுள்ளவர்கள் எதிர்க்கின்றார்கள் என்றும்,தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மேற்கொள்ளவில்லை என்றால் ஏன்  அரசாங்கம் பயப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கம் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரங்களை வைத்திருந்தால் ஏன் சர்வதேசத்திற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ பயப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கரிசனை  தமிழர்கள் மீது  குறைந்து விட்டதாகவே தமிழ்ச் சமூகம் எண்ணிக்கொண்டிருக்கின்றதாகவும் இதன்போது அவர்  மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...