Designed by Iniyas LTD
பருத்தித்துறையில் இரண்டு இளைஞர்கள் கைது.
பருத்தித்துறையில் இரண்டு இளைஞர்கள் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக அல்வாய்ப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டபோதே . மற்றொரு இளைஞனின் வீட்டில் கஞ்சா இருக்கும் தகவலை அவர் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கஞ்சா கொள்வனவு செய்பவர்கள் போன்று பொலிஸார் அந்த இளைஞனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அதன்போது அவர் நிலத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்ததோடு குறித்த இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..