தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றியின் இரகசியம்!

வாழ்க்கை முறை என்பது வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது உயிர் உள்ள எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். மிருகங்களை பார்த்து பறவைகள் கற்றுக்கொள்ளும். பறவைகளை உணர்ந்து மீன்கள் கற்றுக்கொள்ளும். அவ்வாறு மனித வாழ்க்கைக்கு தேவையான சில பண்புகளை பறவைகளிடம் நாம் காணலாம்.

விடாமுயற்சி :

ஒருசெயலை செய்ய வேண்டும் என்று பறவைகள் நினைத்துவிட்டால் அதை அடையும்வரை அங்கிருந்த போகாது. இறைதேடி வானில் வட்டமிடும் கழுகள் மீன்கள் சிக்கும்வரை தனது கூட்டிற்கு செல்லாது. அதேபோல தனது கூட்டை சிறுசிறுதாக கட்டும் காக்கைகள் காற்று அடித்து கூடு பறந்துவிட்டாலும் மீண்டும் அதே உற்சாகத்துடன் குச்சிகளை சேகரிக்க தொடங்கிவிடும்.

கூட்டுமுயற்சி :

கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் பறவைகளை வானில் நாம் அடிக்கடி பார்த்து இருப்போம். ஒரே நேர்முனையில் சரியான இடைவெளியில் தனது இலக்கை நோக்கி பயணித்துகொண்டே இருக்கும். ஏற்கெனவே பேசி வைத்து கொண்டு பறப்பதுபோன்றே நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் அது தான் கூட்டுமுயற்சி. ஒரே மனநிலையில் ஓரு இலக்கை நோக்கி செல்லும் பயணம் அது..

எப்போது பேச வேண்டும்:

எப்போது பேச வேண்டும் என்ற சூட்சமம் பறவைகளுக்கு நன்றாகவே தெரியும். காலை நேரத்தில் மிக உற்சாகமாக காணப்படும் பறவைகள். இரவு நேரத்தில் தங்களது இருப்பிடத்திற்கு சென்ற பிறகு சிறிய சத்தம் கூட இடாது. அதேவேளையில் தங்களுக்கு ஒரு ஆபத்து என்று பறவைகள் உணர்ந்தால் அவைகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இருப்பை உணர்த்தும்:

பறவைகள் எப்போதும் தங்களது இருப்பை உணர்த்திய படி இருக்கும். இந்த குணம் மற்ற எந்த மிருகங்களுக்கும் கிடையாது. குறைவாக ஒலி எழுப்புவதின் மூலம் பறவைகள் தங்களது இருப்பிடத்தை தக்கவைத்து கொள்ளும். மேலும் தங்களை வெளிப்படுத்த பறவைகள் எப்போதுமே தயங்குவதில்லை

Loading...