தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு..

ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த தங்க பாறைகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என சுரங்கத் தொழில் வல்லுநர்கள்  தெரிவித்துள்ளார்கள்.
பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை   இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்  என  கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Comments
Loading...