தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பளையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம் – பதட்டத்தில் மக்கள்

பளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று திங்கட்கிழமை இரவு 8மணியளிவில் பளை காவல்நிலையத்திற்கு அண்மையில் இத்துப்பாக்கி சூடுநடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி ரவைகள் கழுத்து உள்ளிட்ட பகுதிகளை தாக்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமுற்றவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரிற்கு கழுத்தில் சத்திரசிகிச்சை இடம்பெறுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத போதும் பளையில் யுத்த முடிவின் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.முன்னர் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.எனினும் இதனையடுத்து பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் படைதரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் தாக்குதலாளிகள் கைதாகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
படுகாயமடைந்தவர் பளையினை சொந்த இடமாக சேர்ந்தவரென மேலும் தெரியவருகின்றது.

Comments
Loading...