தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா சுட்டுக்கொலை..

பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்,

ரேஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட மோதலில்   ரேஷ்மாவை அவரது கணவர்  சுட்டுகொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேக்ஷ்மாவை சுட்டபின்னர்  அவர் தப்பி விட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பில்  போலீசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் பெண் கலைஞர்களுக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுவது இது 15வது முறை என கூறப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...