தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா 2200 கோடி ரூபா நீதி?

பாகிஸ்தான் – தீவிரவாதிகளின் சொர்க்கப்புரியாக திகழ்கிறது. அங்கு உலவும் தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

அதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிபர் டிரம்ப் கடும் எரிச்சல் அடைந்தார். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ரூ.13 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

அதை தொடர்ந்து அமெரிக்கா- பாகிஸ்தானுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நிதி உதவி வழங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவித்தது.

சமீபத்தில் அமெரிக்காவின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தானுக்கு ரூ.2200 கோடி நிதி உதவி வழங்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

அதில் ரூ.1700 கோடி மக்கள் நலத்திட்டங்களுக்காகவும், ரூ.520 கோடி ராணுவத்துக்கும், ரூ.10 கோடி இதர செலவுகளுக்காகவும், ஒதுக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

Comments
Loading...