தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை – யாழில் நீதிமன்றம் உத்தரவு..

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்  நீதிமன்றம்  வழங்கி உத்தரவிட்டுள்ளது.

யாழ். நகர்ப் பகுதியில் 18 வயதுடைய மாணவன் கடந்த வாரம் 10 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்   கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் , மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக் கழிக்க நீதிவான் அனுமதியளித்தார்.

குறித்த தண்டனைக்காக மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Comments
Loading...