தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரதிபுரம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது

திருகோணமலை – தம்பலகாமம் பாரதிபுரம் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வு நேற்று தம்பலகாமம் பொது மயானத்தில் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை, தம்பலகாமம் – பாரதிபுரம் பகுதியில்  காவல்துறையின‌ரினால் படுகொலை செய்யப்பட்ட 8 தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை புதைத்த இடத்தில் நினைவுத்தூபியை புதிதாக அமைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவேந்தலை நடத்தினர்.   இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Loading...