Designed by Iniyas LTD
பார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் ஆப்!

முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் சவுண்ட்ஸ்கேப் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்டீரியோ ஹெட்செட்களை பயன்படுத்த வேண்டும். தற்சமயம் வரை சவுண்ட்ஸ்கேப் செயலி ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.
மைக்ரோசாஃப்ட் தளத்தில் சவுண்ட்ஸ்கேப் குறித்த தகவல்களில் இந்த செயலி ஆடியோ கியூ மற்றும் லேபெல்களை 3D வடிவில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயலி வழங்கும் ஆடியோ தகவல்கள் குறிப்பிட்ட இடம் இருக்கும் திசையை பார்வையற்றோருக்கு உணர்த்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பதிவு
இந்த செயலியை கண் பார்வை உள்ளவர்களும் பயன்படுத்த முடியும், இதனால் அவர்கள் அருகில் இருப்பனவற்றை மிகவும் நேர்த்தியாக கேட்டறிந்து கொள்ள வசதியாக இருக்கும். சவுண்ட்ஸ்கேப் செயலியை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கேமரா செயலி பார்வையற்றோருக்காக மைக்ரோசாஃப்ட் உருவாக்குகிறது. புதிய சவுண்ட்ஸ்கேப் செயலி போன் கன்டகஷன் ஹெட்செட், ஆப்பிள் ஏர்பாட்கள், இன்-இயர் ஓபன் ஹெட்போன் மாடல்களில் சீராக வேலை செய்யும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
சவுண்ட்ஸ்கேப் செயலியின் மற்ற அம்சங்களை பொருத்த வரை பயன்படுத்துபவர் தன்னை சுற்றி இருக்கும் விஷயங்களை கேட்டறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட இடம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மற்ற இடங்கள் குறித்த விவரங்கள், பயனர் முன் இருப்பனவற்றையும் தெரிவிக்கும்.
ஆப்பிள் பிளே ஸ்டோரில் தற்சமயம் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி ஐ.ஓ.எஸ். 10.0 இயங்குதளம், ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன் மாடல்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் ஆடியோ தகவல்களை வழங்கும் மைக்ரோசாஃப்ட் சவுண்ட்ஸ்கேப் 447.1 எம்.பி. மெமரி அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.