தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிர­தேச சபைச் செயற்­பா­டு­கள் மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு..

பிர­தேச சபை­கள் மற்­றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளின் செயற்­பா­டு­கள் அனைத்­தும் இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தா­கக் குற்­றஞ்­சாட்டு எழுப்­பப்­ப­டு­கின்­றது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது இந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

‘‘சபை அமர்­வில் யார் யார் என்­னென்ன பிரே­ர­ணை­கள் கொண்டு வரு­கின்­றார்­கள்? யார் என்ன பேச­வுள்­ள­னர்? என்­பதை சபை அமர்­வுக்கு முன்­ன­தாக இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­கள் அறிந்­து­கொள்­கின்­ற­னர்’’ என  அமர்­வில் பேசிய உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார்.

நல்­லூர் பிர­தேச சபை அமர்வு  சபை­யின் தவி­சா­ளர் தியாக­மூர்த்தி தலை­மை­யில்  நடை­பெற்­றது.

அப்­போது சபைக்­குள் இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­க­ளின் ஊடு­ரு­வல் ஏற்­பட்­டி­ருப்­பது சபை உறுப்­பி­னர்­க­ளின் பாது­காப்­பைக் கேள்­விக் குறி­யா­கி­யுள்­ளதாக   சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ளது..

‘தன்னை இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்று தொலை­பே­சி­யில் அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்ட ஒரு­வர் நாளைய அமர்­வில் இரா­ணு­வக் காணியை திரும்­பப் பெற­வேண்­டும் என்ற பிரே­ர­ணையை தவி­சா­ளர் கொண்­டு­வ­ரப்­போ­கின்­றா­ராமே! ஏன் திரும்­பப் திரும்­பக் கொண்டு வரு­கின்­றார்? என்று கேட்­டார். நீரும் அதற்­குப் பின்­ன­ணியா? என பிரதேசசபை உறுப்­பி­னர் சிவ­லோ­க­நா­தன் தெரி­வித்­துள்ளார்.

இதுபோல எதிர்­கா­லத்­தில் இப்­ப­டி­யான சம்­பங்­கள் இடம்­பெற்­றால் அவை தொடர்­பில் தீவிர நட­வ­டிக்கை எடுப்­பது என  இறு­தி­யில் தீர்­மா­னிக்­கப்­பட்­டதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Comments
Loading...