தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி -இந்திய மத்திய அமைச்சர்..

மூத்த தலைவர்  பழ. நெடுமாறன் கூறுவதுபோல தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி என இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, இராமநாதபுரத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்  அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் என தெரிவித்திருந்தார்.

பழ நெடுமாறனின்  இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன் இராதாகிருஷண்னன் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழக  ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...