தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரபாகரன் மீண்டும் வருவார் – பழ. நெடுமாறன்…

இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் , அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும்.

அப்போது அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படாத காரணத்தினால்  அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர்.

இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை என்றும் . அவர் நலமுடன் இருந்து வருவதாகவும் ,

இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் பிரபாகரன்  வெளிப்படுவார்  எனவும் பழ நெடெமாறன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...