தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பில்கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

ஸ்மார்ட்போன் சந்தையி்ல் கால்பதிக்க நினைத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அந்நிறுவன இணை நிறுவனர் விண்டோஸ் 10 இயங்குதள மொபைல் போன்களில் நம்பிக்கை இழந்தவராக தெரியவந்துள்ளது.

சத்ய நாதெல்லா தலைமையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் வழங்கி வருகிறது. இதேபோல் மைக்ரோசாஃப்ட் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பில் கேட்ஸ் தனது வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் தனியார் நிறுவன பேட்டியில், அதிகப்படியான மைக்ரோசாஃப்ட் செயலிகள் இடம்பெற்றுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஐபோனிற்கு மாற்றாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக தெரிவித்தாலும், எந்த ஸ்மார்ட்போனினை பயன்படுத்துகிறார் என்ற தகவல்களை பில் கேட்ஸ் வழங்கவில்லை.

எனினும் அதிகப்படியான வி்ண்டோஸ் செயலிகள் இடம்பெற்றுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற தகவலை வழங்கியுள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோசாஃப்ட் எடிஷன் சாம்சங் கேலக்ஸி S8 அல்லது கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்த கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ், ஒன்டிரைவ், கார்டனா, அவுட்லுக் மற்றும் பல்வேறு இதர செயலிகளுடன் வருகிறது.

‘ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு பின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து நல்ல பணிகளை மேற்கொண்டு வருவதாக சிறப்பான ஒன்றாக இருக்கிறது. அனைத்து வகையான் விண்டோஸ் கணினிகளையும் பயன்படுத்தி வருகிறேன். சமீபத்தில் அதிகப்படியான மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள் இடம்பெற்றுள்ள ஆண்ட்ராய்டு போனினை பயன்படுத்தத் துவங்கியுள்ளேன்.’ என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மற்ற சந்தேகங்களை தவிர்த்து ஐபோன் பயன்படுத்தவில்லையா என்ற கேள்விக்கு, பில் கேட்ஸ், ‘இல்லை, ஐபோன் இல்லை’ என பதி்ல் அளித்துள்ளார். ஐபோன் பயன்படுத்தவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் பணிகளை பாராட்ட தவறவில்லை.

Comments
Loading...