தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய போராட்ட களத்தில் நடிகர் சங்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி  வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார்.

டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திரையுலகினர் போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...