தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் போராளிகள் ஜனநாயகக்கட்சியினரால் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்!

புதுக்குடியிருப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியால் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு சிறப்பாக நடைபெற்றது.
தாயகவிடுதலைக்காகவும் மானிடவிடுதலைக்காகவும் தம்மையே அர்ப்பணித்து ஆகுதியாகியோரை நினைவில்கொள்ளும் மாவீரர்மாதத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வினை தாயகத்தில் ஜனநாயகபோராளிகளின் ஏற்பாட்டில் காந்தள் அமைப்பினருடன் இணைந்து இன்று புதுக்குடியிருப்பு தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவான மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மாவீரம் நினைவில்கொள்ளப்படும் காலத்தில் போராளிகள் மாவீரர்குடும்பங்கள் தாயகஉறவுகள்கலந்துகொண்டு மாவீரர்களுக்கு மலர்மாலை அணிவித்து மதிப்பளிக்கப்படுகின்றனர்.

Comments
Loading...