தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பு மத்தியக் கல்லூரிக்கு 3 லட்சம் நிதியுதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மூன்று இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் சுற்றுமதிலுக்காகவும், நீர் வழங்கலுக்கான கருவிகளுக்காகவும் குறித்த ஒதுக்கீடானது பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...