தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புது வீட்டில் குடிபுகுந்த மறுதினமே 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பணம் கொள்ளை – யாழில் சம்பவம்..

யாழ் ஏழாலையில் புதிதாக கட்டிய வீடொன்றில் குடிபுகுந்த மறுதினமே வீட்டிலிருந்து தாலிக்கொடி உட்பட 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம்  யாழ்.ஏழாலை ஏழு கோயில் வீதியிலுள்ள ஆசிரியையொருவரின் வீட்டிலேயே  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நகைகள் மற்றும் பணத்தைப் கைப்பைக்குள்  பத்திரமாக வைத்துவிட்டு ஆசிரியர் மற்றும்  வீட்டிலிருந்த ஏனையவர்களும் உறங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில் மறுநாளான (22) அதிகாலை ஆசிரியர்  எழுந்து  பார்த்த போது வீட்டு யன்னலூடாக அவரது கைப்பை மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

அதற்குள்ளிருந்த பெறுமதியான தாலிக் கொடி, தங்கநகைகள், பணம் என்பன திருடப்பட்டிருப்பது கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டில் திருடர்கள் எவரும் நுழைந்தமைக்கான தடயங்கள்  எதுவும் காணப்படாத நிலையில்  யன்னலூடாக  இந்த திருட்டு  இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீ சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த  கொள்ளைச் சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...