தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அழகுகளால் ஜொலிக்கும் சீனா…

சீன நாட்டின் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்கு அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சீனா நாட்டின் பல்வேறு வீதிகளிலும் , அங்குள்ள முக்கிய நகரங்களிலும் மின்னொளியில் அழகுகளால் ஜொலிக்கின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்தையிட்டு அங்கு சுமார் 20 லட்சம் எல்.இ.டி விளக்குகளினால் கட்டடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்கே பல வண்ணங்களில் இருக்கும் ராந்தர் விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிவரும் சீன மக்கள், தெருக்களில் ஜொலிக்கும் கட்டடங்கள் முன் நின்று பிரமிப்பாக பார்த்து ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் இதேபோன்று, ஹாங்காங் நகரில் நடைபெற்ற சீன புத்தாண்டை ஒட்டி அழகிய வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதேவேளை  சீனப் புத்தாண்டை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 5-ஆம் தேதி மலேசிய சீனர் வணிக சங்கங்கள் இணைந்து  திறந்த இல்ல பொது உபசரிப்பு விழாவை நடத்தியுள்ளனர்.

இதில் பிரதமர் மகாதீர், அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் லிம் குவான் எங் உள்ளிட்ட உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Comments
Loading...