தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூமியை இருள் சூழாது!

பூமியை 15 நாட்கள் இருள் சூழும் என்று வெளியாகி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என விண்வெளி ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்எ திர்வரும் நம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு பகல் இருக்காது என தற்போது இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாசா நிறுவனத்தை மேற்கோள்காட்டி, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் நவம்பர் 30 ஆம் திகதி பிற்பகல் 4.45 மணி வரை பகல் தோன்றாது என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையில் ஏற்படும் அறிவியல் ரீதியான சம்பவமே பூமியை இருள் சூழ காரணமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னரும் இப்படியான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகியதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் விண்வெளித்துறை விஞ்ஞானியான பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்

Comments
Loading...