தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு…

அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது பர்னாட்ஸ்  நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.  அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டதாக உள்ளதெனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கின்றதாகவும்,  அதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற   நிலையில் உயிரினங்கள் வாழமுடியாது எனவும் கூறப்படுகின்றது.

இதற் காரணம்    அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதேவேளை அங்கு தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும் என்றும், .அவை உறைந்த நிலையில் இருக்கலாம் எனவும்   விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...