தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூம்ராவும் உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் ஒருவர்-சச்சின் ..

உலகின் மிகவும் சிறப்பான வீரர்களில் பூம்ராவும் ஒருவர் என்று முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,

டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார்.

இந்நிலையில், பூம்ரா தொடர்பாக முன்னாள் நட்சத்திரவீரர்  சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,முயற்சியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இந்த  வெற்றிக்கு பூம்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பூம்ரா வலிமையடைந்து கொண்டே செல்கிறார். உலகின் மிகவும் சிறப்பான வீரர்கள் அவரும் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...