தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை …

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான்   நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அதோடு  அந்நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...