தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெப்ரவரி 4  திகதி கனடாவில் இலங்கையின்  சுதந்திர தினத்திற்கான கண்டனப் போராட்டம் – அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு..

கனடா  ஸ்கார்புரோவில் எதிர் வரும் பெப்ரவரி 4  திகதி இலங்கையின்  சுதந்திர தினத்திற்கான கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கண்டனப் போராட்டத்தை  கனடிய தமிழ்ச் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து  முன்னெடுக்கவுள்ளது.

கனடா  ஸ்கார்புரோவில் அமைந்துள்ள Chandini Banquet மண்டபம் என அழைக்கப்பட்ட Grand Cinnamon Banquet Hall 3885 McNicoil, Scarborough இல் அமைந்துள்ள விருந்துபசார மண்டபத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

இந்த கண்டன போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் எம் அடையாளங்களுடன் அணிதிரண்டு வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 71வது சுதந்திர தினம் சிங்களத்திற்குரியதே தவிர தமிழருக்கானதல்ல. உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாக 71 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் போராடி வரும் எமக்கு,

இன்றுவரை எந்தவொரு நீதியையும் வழங்காமல் தமிழ் மக்களை இரண்டாம் தரமக்களாக இன்றுவரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் இலங்கை  அரசின் சுதந்திரதினத்தை வலிகளுடனும் வேதனைகளுடனும் ஆறாத காயங்களுடனும் வாழும் ஈழத்தமிழராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் .

பிரித்தானியரிடம் இருந்து சிங்களவரின் கையில் ஶ்ரீலங்கா  தீவின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழரின் துக்கநாள்.

சுதந்திரதின விழாவில் இனமான தமிழர் எவரையும் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர் .

உணர்வுள்ள தமிழினமே எழுந்து வா, ஒன்றுபட்டு எம் விடுதலையை வென்றெடுப்போம்.

Comments
Loading...