தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன்  இல்லை- சிறிதரன்

பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன்  இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி  பத்திரிகை ஒன்றுக்கு  வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

எனினும் சுதந்திர தினம் சம்பந்தமாக கட்சி ரீதியாக முடிவுகள் இதுவரை காலத்தில் எடுக்கப்படவில்லை என்றும்,

தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றதாகவும்,

எனினும் பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ,தந்தை செல்வா போன்று சம்பந்தன் ஐயாவும்  கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார் என்று கூறுகின்றாரோ தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்  தன்னைப் பொறுத்த வரையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் இன ரீதியான அழிப்புக்களுக்கு மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மன ரீதியான தயார் நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் இதன்போது தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...