தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேச்சு திறமையால் பலர் வாழ்க்கையை மாற்றும் 11 வயது சிறுவன்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மாத் ஸாபி 11 வயது சிறுவன் தற்சமயம் இண்டெர்நெட்டில் முக்கிய நட்சத்திரமாக வலம் வருகின்றார்.

இவரின் ஊக்கமிகு வீடியோக்கள் யூடியூப்பில் பல பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன.

ஹம்மாத் தற்போது பெஷாவர் நகரில் உள்ள ஸ்போக்கன் இங்லீஷ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தனது பேச்சு மூலம் தன்னம்பிக்கை மற்றும் பேச்சுத்திறமையை வளர்த்து வருகிறார்.

பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள ஹம்மாத் இளம் வயதில் பேசுவதை பலர் கேட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நொடியும் சவாலானது. நமக்கு நேரும் தோல்வி தான் வெற்றிக்கு அடிப்படை என்ற ஹம்மாத்தின் நம்பிக்கை வாக்கியங்கள்.

அவரின் இந்த பேச்சு பலரை வாழ்க்கையின் வெறுப்பிலிருந்து மேலே கொண்டு வருகிறது.

தினமும் 12-13 மணி நேரம் புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தினை கொண்டுள்ள ஹம்மாத் சிறு வயதில் பெரும் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றமை குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

Comments
Loading...