தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேட்ட ‘ படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி – கார்த்திக் சுப்புராஜ்..

பேட்ட படம்   வெற்றிகரமாக திரையரங்குளில்   ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படத்தை ரசிகர்களும் , பிரபலங்களும் கண்டு மகிழ்ந்துள்ளனர். அதோடு  ரசிகர்கள் இந்த  படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் நேற்றையதினம்  ‘பேட்ட ‘படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறியதாவது , ‘ பேட்ட ‘ படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்த படம்  ரசிகர்களுக்கும் நன்றாக பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நன்றாக நடித்துள்ளார். இந்த ‘ புகழ் அனைத்தும் ரஜினியையே சேரும் ‘என அவர் தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...