தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேட்ட – விமர்சனம்…

ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராஜகம்  பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள்.
இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார்.
ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்களிடம் இருந்து , ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். 
 அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள்.
ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல்.  திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.
பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.

 

Comments
Loading...