தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேருந்து நிலையத்தில் உருண்டோடிய தலை! பீதியில் உறைந்து போன மக்கள்

காஞ்சிப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் வெட்டப்பட்ட மனிதனின் தலை ஒன்று சாலையில் வீசப்பட்டதால் இதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இந்த சம்பவம் இன்று காலையி நடைபெற்றது. அந்த பகுதி பேருந்து நிலையத்தின் வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் பிளாஸ்டிக் கவர் ஒன்றை சாலையில் வீசி சென்றுள்ளனர்.

அவர்கள் அந்த கவரை வீசி சென்ற வேகத்தில் அதில் இருந்து தலை ஒன்று உருண்டு வெளியே ஓடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மனித தலையை அங்கிருந்து மீட்டனர். அது கோனாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது தலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது உடல் எங்கே இருக்கிறது என போலீஸார் தேடி வருகின்றனர்.

Comments
Loading...