தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேருந்து மரத்துடன் மோதியதில் மூவர் படுகாயம்…

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது

கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று இன்று அதிகாலை 2.45 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும்  இடைப்பட்ட பகுதியில் வீதியருகில் இருந்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது

இதன்போது பேருந்தில் பயணித்த சுமார் 25 பயணிகளில் 3 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பலர் சிறிய சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்

பேருந்தின் சில்லு காற்று போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படும் அதேவேளை பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது  

விபத்து  தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Comments
Loading...