தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பைக் பிரியரொருவர் தன் பைக்குக்கு பெட்ரோலுக்கு பதில் வோட்கா பயன்படுத்தி சாதனை…

அமெரிக்காவின் மாண்டோனா பகுதியைச் சேர்ந்தவர் ரயான் மொண்டொகொமரி. 41 வயதாகும் இவர் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்திவருகிறார்.

பைக் பிரியரான ரயான் நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த யமகா எக்ஸ்.எஸ்650 பைக்கை சரி செய்துள்ளார்.

அந்த பைக்கின் என்ஜினில் பெட்ரோலுக்கு பதிலாக வோட்காவை ஊற்றி அதை வெற்றிகரமாகவும் ஓட்டியுள்ளார்.

அந்த பைக்கை மணிக்கு 181 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சாதனையும் படைத்துள்ள ரயான், எரிபொருளாக பயன்படுத்திய  வோட்காவுக்கு `ஹெட்’எனவும், தன்னுடைய பைக்குக்கு ‘சடன் விஸ்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.

வண்டியை பழுதுபார்ப்பதற்கும், இந்த எரிபொருளை தயார் செய்வதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகியுள்ளதாக ரயான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருளாகப் பயன்படுத்திய வோட்கா குடிக்க உகந்ததல்ல எனவும் ரயான் கூறியுள்ளார்.

Comments
Loading...