Designed by Iniyas LTD
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
21 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய வீரர்களிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
போட்டிக்கு சென்ற வீரர்களில் 48 கிலோகிராம் பளு தூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிராம் பளு தூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால், ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திக்க திசாநாயக்க ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
இலங்கைக்கான மூன்று பதக்கங்களும் பளு தூக்கும் போட்டிகளிலேயே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொதுநலவாய விளையாட்டில், 71 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.