தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொத்துவில் பாணமையில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்

அரச படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தரக்கோரி பொத்துவில் – பாணமை பிரதேசத்து மக்களால் நேற்று வீதி மறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் ராகம்வெளி மக்களால் பொத்துவில் பிரதான வீதியினை மறித்து பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ராகம்வெளி மற்றும் ஏனைய காணிகள் நான்கு வ௫டங்களுக்கு மேலாகியும் உரிய மக்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு ஏதிராக கோசங்களை எழுப்பியுள்ளனர்.

பொது மக்கள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை தீர்மானங்கள் எட்டப்பட்டும் உத்தியோகபூர்வமாக மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்களுக்கு மீள கையழிக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன்போது ராகம்வெளி, சாஸ்திரவெளி,பாணமை, கண்ணகிபுரம்,அஷ்ரப்நகர்,பொன்னாகம் வெளி,கனகர் கிராமம் போன்ற இடங்களில் அரச படையினர்,அரசியல்வாதிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...