தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் இரத்து

இன்று முதல்  இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதன்படி  இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், பஸ் நடத்துனர்கள்,மற்றும்  தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால்  அவர்கள்  வேலை நிறுத்தத்தை கைவிடும் வரையில்,   இதனை  நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  24 மணித்தியாலங்களும்  பயணிகளின் தேவைக்கு அமைய இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இ. போ. சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...