தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராளிகளை எப்போதும் சமூகம் மதிக்கும் …

போராளிகளை எப்போதும் சமூகம் மதிக்கும் அவனுக்கொன்றென்றால் தன்
கையில் தீபட்டதாய் பதறியடித்து அதற்கான எதிர்வினையை காட்டும்

தமிழீழ விடுதலை போராட்டம் களத்தில் மௌனித்த பின் அதற்கான வேகம் உலகம் தழுவிய ரீதியில் மந்த கதியிலேயே நகர்கின்றது. அப்படியேனும் நகர்வதற்கு சர்வதேச ரீதியாக சில விரல்விட்டு எண்ண கூடிய செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வேகமாக இயங்குவதே காரணம்.
பிரித்தானியாவை பொறுத்தவரை நாடுகடந்த அரசாங்கம் விடுதலைப்போராட்டத்தை முன்நகர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது

போர்க்குற்றம் இனப்படுகொலை காணாமல் போனோர் விவகாரம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள்
போராளிகள் மாவீரர் குடும்பநலன்
களத்திலும் புலத்திலும்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்
விளையாட்டு துறையூடாய் இரு களங்களிலும் இளையோரை உள்வாங்குவது
ஸ்ரீலங்கா அரசு சார்பில் எவர் தன் நாட்டை தாண்டி பிரித்தானியா பக்கம் வந்தாலும் அவர்களை பின்னங்கால் தலையில் பட ஓட வைப்பது . இவ்வாறாக இலங்கை அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கும் கட்டமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய கட்டமைப்பு.

இவ்வாறு அந்த கட்டமைப்பு பற்றி பொதுவெளியில் கருத்துருவாக்கம் ஏற்பட அந்த கட்டமைப்பில் இயங்கும் யோகி அண்ணாவின் தன்னலமற்ற செயற்பாடுகள் முக்கிய காரணம் எனலாம்.

சமூக நலன் மற்றும் விளையாட்டு துறைக்கான அமைச்சுக்கான உதவி அமைச்சராக அவர் இருந்தாலும் ,அவர் அதற்குள் மட்டும் தன்னை அடைத்து கொள்வதில்லை
அவரை கேட்டால்
“தேசம் அடைவதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நாம் செய்யவேண்டும் தம்பியா” என்பார்
இனவிடுதலை சார்ந்து
சிலர் கலந்து கொள்ளும் போராட்டங்களின் போதும் அந்த சிலரில் ஒருவராக நின்று கோசம் எழுப்பியபடி நிற்பார்
பலர் கலந்து கொள்ளும் போராட்டங்களின் போதும் அந்த பலரில் ஒருவராக நின்று கோசம் எழுப்பியபடி நிற்பார்
போராட்ட களங்களிற்கு வரும் பழைய முகங்களை எப்படி இன்முகத்தோடு எதிர்கொள்வாரோ அதேபோல்தான் போராட்ட களங்களிற்கு வரும் புதிய முகங்களையும் இன்னொரு படி கூடுதலாகவே முகம் மலர இன்முகத்தோடு எதிர்கொள்வார்
இப்படிப்பட்ட தன்னலமற்றவர்கள்தான் போராளிகளாக இருக்க முடியும் அப்போதுதான் சமூகமும் அவர்களை ஏற்கும் இனம் வாய்க்க பெற்ற இந்த போராட்டகாரனைத்தான் நேற்றைக்கு முன்தினம் ஸ்ரீலங்கா அரசின் பொய்பிரச்சாரத்தை நம்பி பிரித்தானிய காவல்துறை கைது செய்து ஒருநாள் முழுதும் தன்னோடு வைத்து தண்டித்தது.

உண்மையில் நான் சந்தேக கண்ணோடுதான் என் சமூகத்தை பார்த்தேன் யோகி அண்ணனின் இந்த கைதை என் சமூகம் பத்தோடு பதினொன்றாக கடந்து போய்விடும் என்றே ஐயுற்றேன்
என் நினைப்பை வெறும் கற்பனைதான் என அழுத்தமாக என் சமூகம் உணர்த்தியது
போராளிகளை எப்போதும் சமூகம் மதிக்கும் அவனுக்கொன்றென்றால் தன்
கையில் தீபட்டதாய் பதறியடித்து அதற்கான எதிர்வினையை காட்டும் என்பதை என் மக்கள் காட்டியுள்ளார்கள்
தனி மனிதன் ஒருவனுக்காய் அந்த
சமூகம் சமுத்திரமாய் மாறி கொந்தளித்தது
விளைவு விடுதலையாய் விளைந்தது
அண்ணனுக்கும் அவரோடு களமாடி கைதாகி இன்று விடுதலையான மற்றைய சகோதரர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

பேரன்பின்
வி.மயூரன்
10/10/18

Comments
Loading...