தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போலி கணக்குகளை முடக்கும் பேஸ்புக் நிறுவனம்

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில்  இங்கிலாந்தில்   பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா  அரசியல் பரப்புரை நிறுவனத்திடம் பகிரப்பட்டிருந்ததாக   தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வன்முறை

இதையடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போலி பேஸ்புக்

இதன் அடிபடையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி பேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் பேஸ்புக்  பதிவில் இருந்து  நீக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

 

Comments
Loading...