தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தவுடன் இணையுமாறு அனந்திக்கு அழைப்பு…

வடக்கின் முக்கிய அரசியல் புள்ளியான அனந்தி சசிதரன் மஹிந்தவுடன் இணைந்து சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என கருணா  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனந்தி சசிதரன் புதிய கட்சியை ஆரம்பித்தமைக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

“வடகிழக்கு பெண்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. அனந்தி சசிதரனின் புதிய கட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும்” என கருணா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...