தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களின் வாழ்க்கை முறையால் அதிகளவு கொல்லப்படும் மக்கள்? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், மக்களின் வாழ்க்கை முறை அதிக அளவு நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் தொற்று நோய்களால் இறப்பவர்களை விட இதய நோய், கேன்சர் போன்ற நாள்பட்ட நோய்களால் மக்கள் அதிக அளவு இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோய்கள் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுபட்டால் ஏற்படுகின்றன. அதாவது அவர்கள் சாப்பிடும் உணவில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

61.8 சதவீதம் பேர் இத்தகைய நாள்பட்ட நோயால் இறக்கின்றனர். 27.5 சதவீதம் பேர் வயிற்றுப் போக்கு, டி.பி. போன்ற நோயால் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பவர்களின் சதவீதம் 35.5 சதவீதத்திலிருந்து 14.6 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் நோயின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

நோயினை தடுக்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேன்சர், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள மாநில மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

Comments
Loading...