தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தையே என்கிறார் குமாரவெல்கம

மக்கள் தற்போது எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தையே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால்  நீண்டகாலத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் நாட்டை அரைவாசிக்கு மேல் அழிவுக்கு உட்படுத்திவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதன்போது  குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

Comments
Loading...