தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…

மட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது .

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையில் இரவு நேர கடமையில் இருந்து ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

55 வயது மதிக்கத் தக்க சி.சிவசீலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்மமான மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அ ண்மைக்காலமாக வாவிகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் மற்றும் பொது இடங்களில் இருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...