தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் ஒருவர் கைது…

மட்டக்களப்பில்  பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர்  கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோது   மட்டக்களப்பு  பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மட்டக்களப்பு  கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதி  பகுதியில்  குறித்த  நபர்  வீடு  ஒன்றில்  கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோதே  கைது செய்யப்பட்டுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7500  மில்லி லீட்டர் கசிப்பு  ,37500 மில்லி   லீட்டர் கோடா  மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்  நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...