தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் தழிழ் மாணவியை கடத்தி மதம் மாற்றிய முஸ்லீம் ஆசிரியர்கள்..

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவரை,

அதேபாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவர்  கடத்தி சென்று , அம்  மாணவியை  இஸ்லாம் மதத்திற்கு மாற்றியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு குறித்த மாணவியை  பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவிக்கு,

அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் பலவந்தமாக குர்ரான் கற்பித்துள்ளனர்.

அதன் பின்னர்  கடந்த மாதம்  மாலை நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவியை  ஆசிரியர்கள் இருவரும் காத்தான்குடிக்கு கூட்டிச்சென்று குறான் கற்பித்துள்ளனர் .

பின்னர் 03.01.2019 அன்று வீட்டில் இருந்து மாணவி காணாமல் போய் உள்ளார்.

மாணவி காணாமல் போன விடயம் குறித்து பெற்றோர்  ஏறாவூர் பொலீசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த  மாணவி பரிதாவுடன் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பியதோடு, பெற்றோருடன் தொடர்பு கொண்டு தான் குர்ரான் படிப்பதாகவும் தன்னை  தேடவேண்டாம் என்றும்  கூறியுள்ளார்.

தற்போது குறித்த   மாணவி காத்தான்குடியில் இருப்பதா அறிந்து பெற்றோர் காத்தான்குடி பொலீசில் முறையிட்டு உள்ளனர்.

அதன் பின்னர் இன்று காலை காத்தான்குடி பொலீஸ்நிலையம் வரும்படியும் மாணவியை பெற்றோருக்கு காட்டமுடியும் ஆனால் ஒப்படைக்க முடியாது எனவும்  மாணவியை கடத்திய முஸ்லிம் ஆசிரியர்கள் சர்பாக கூறப்பட்டுள்ளதால் குறித்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை  களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன் மதம் மாறும் குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் வரை வழங்குவதாகவும்  கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்பொழுது குறித்த மதம் மாற்றும் செயற்பாடுகளை பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளமையானது கிழக்கு மாகாண நிர்வாகத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் எந்தவகையில் அதிகரித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளதாகவும்,

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளேன தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...